இஸ்ரேலுக்காக ஆதரவு வழங்கிய அவுஸ்திரேலியா; ஹமாஸ் மீது கண்டனம்

0
336

இஸ்ரேல்மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழு நடத்திய தாக்குதலை அவுஸ்திரேலியா அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

தமது கண்டனத்தை அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். “நட்பு நாடான இஸ்ரேல் பக்கம் அவுஸ்திரேலியா நிற்கின்றது.

இஸ்ரேல் அதன் நகரங்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஹமாஸ் நடத்திய கண்மூடித்தனமான மற்றும் வெறுக்கத்தக்க தாக்குதல்களை கண்டிக்கிறோம்.

இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்” என்று பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.