இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று செவ்வாய்க்கிழமை அவரது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட 600க்கும் அதிகமான கலைப்பொருட்கள் ஏலத்தின் விடப்பட்டுள்ளன.
அவ்வப்போது இப் பரிசுப்பொருட்கள் மின்னணு முறையில் ஏலத்தில் விடப்படும். அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒருபகுதி இராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும். ஆறாவது கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஏலம் ஒக்டோபர் 2ஆம் திகதி வரையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
