கொழும்பு புறநகரில் நடந்த துணிகர கொள்ளை முயற்சி: நூலிலையில் தப்பியோடிய பெண்

0
151

கொழும்பு புறநகர் பகுதியான வத்தளையில் நடந்த கொள்ளை முயற்சியின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. ‘X’ தளத்தில் பகிரப்பட்டுள்ள காணொளி தகவலின்படி இந்த சம்பவம் நேற்று இரவு வத்தளை குடா-எடந்த வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வத்தளையில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

சந்தேகநபர் ஒருவர் காரின் கண்ணாடியை உடைக்க முயற்சித்த போதிலும் அந்த பெண் தப்பியோடியுள்ளார். சந்தேக நபர்களால் பெண் தடுக்கப்படுவதை காணொளி காட்சிகள் காட்டுகிறது.