ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்க முயற்சி: யாழ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
147

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் டெலிகொம் நிறுவன ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றது.

நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துகின்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கடந்த 19 ஆம் திகதி முதல் ஸ்ரீலங்கா டெலிகொம் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.