ஈரானில் இஸ்லாமிய வணக்கஸ்தலம் ஒன்றில் நேற்று நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஈரானின் தென் பகுதியிலுள்ள ஷிராஸ் நகரில் ஷியா வணக்கஸ்தலம் ஒன்றில் இத்தாக்கல் நடத்தப்பட்டது.
ஒரு பயங்கரவாதி இத்தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலாளி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இதனால் பெண்கள் அழ ஆரம்பித்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் ஒரு பெண் மற்றும் இரு சிறார்களும் அடங்கியுள்ளதாக ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அதற்கு முன்னதாக தொலைக்காட்சியில் உரையாற்றிய ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi)கூறினார்.