33 வருடங்களின் பின்னர் இலங்கை வந்த கனேடிய பிரஜைகள் மீது மட்டக்களப்பில் தாக்குதல்

0
346

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு நிகழ்வு நடைபெற்றுவருகின்றன. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த இருவர் மீது மட்டக்களப்பில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் தலைவர் மற்றும் செயலாளர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பழைய மாணவர்கள் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா,  அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளார்கள். இந்நிலையில் கனடா நாட்டில் இருந்து வந்தவர்கள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான இருவரும் இலங்கையில் இருந்து புலம்பெயரந்து 33 வருடங்களின் பின் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கனடா தூதரகத்திடமும் தமக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.