இறுதிசுற்றுக்கு தகுதியிழந்த அருண – தொடர் தோல்விகளால் திணரும் இந்தியா: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024

0
191

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து 12ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில் பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை ஐக்கிய அமெரிக்கா தக்கவைத்துள்ளது.

இதனடிப்படையில் 24 தங்கம், 31 வெள்ளி, 31 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 86 பதங்கங்களை வென்று அமெரிக்கா முதலிடத்திலும், 22 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்லம் அடங்கலாக மொத்தம் 59 பதக்கங்களை வென்று சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

நேற்று மூன்றாம் இடத்துக்கு முன்னேறியிருந்த பிரான்ஸ் இன்று நான்காம் இடத்துக்கும், 14 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 35 பதக்கங்களை வென்று அவுஸ்திரேலியா மூன்றாம் இடத்துக்கும் முன்னேறியுள்ளன. தொடர்ந்து பிரித்தானியா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஒப்பிடுகையில் இந்த முறை ஐக்கிய அமெரிக்கா அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அப்போதைய போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 113 பதக்கங்களை வென்று முதலிடத்திலும் 38 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 89 பதக்கங்களை வென்று சீனா இரண்டாம் இடத்திலும் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் அடங்கலாக 58 பதக்கங்ளை வென்று ஜப்பான் மூன்றாம் இடத்திலும் இருந்தன.

இறுதி போட்டிக்கான தகுதியினை இழந்தார் அருண தர்ஷன

இதேவேளை, பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் அரையிறுதிக்க தகுதி பெற்றிருந்த அருண தர்ஷன 5ஆம் இடம் பிடித்துள்ளார். இதனால் அவர் இறுதி போட்டிக்கான தகுதியினை துரதிஷ்டவசமாக இழந்துள்ளார்.

நேற்று இரவு 11.012க்கு ஆரம்பித்த குறித்த போட்டியில் அருண தர்ஷன 400 மீற்றர் ஓட்டத்தை 44.75 வினாடிகளில் கடந்திருந்திருந்தார்.

அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி, சாம்பியா, அமெரிக்கா, போட்ஸ்வானா மற்றும் கிரெனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் அருண தர்ஷனவுடன் அரையிறுதி 02 இல் போட்டியிட்டனர்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத், நீரஜ் சோப்ரா

போராட்டம், கண்ணீர், மிரட்டல் என பல்வேறு தடைகளை கடந்து சர்வதேச போட்டியான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வந்த வினேஷ் போகத்திற்கு முதல் சுற்றே சவாலானதாக இருந்தது. காரணம் 4 முறை ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன், சர்வதேச போட்டிகளில் 82 முறை விளையாடி ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத ஜப்பான் வீராங்கனை யுகி சாசாகி(Yue Sasaki) ஐ எதிர்த்து விளையாடினார்.

இதுவரை தோல்வியே சந்திக்காத யுகி சாசாகியை இறுதி வினாடியில் வீழ்த்தி மீண்டும் புதிய வரலாற்றை உருவாக்கி காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ்.

காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டு வீராங்கனை லிவாக்ஞ் (LIVACH)யை எதிர்கொண்ட வினேஷ் 7க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மேலும் நேற்றைய தினம் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.

Oruvan

ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி

நேற்றைய தினம் ஆடவர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டி நடந்தது. அதில் இந்தியாவும் ஜெர்மனியும் விளையாடின. இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பாக இருந்த இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. பரபரப்பாக நடந்த போட்டியில் இரு அணிகளும் இறுதி வரை கோல்களை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தின.

2 கோல்களுடன் ஆட்டம் சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியில் ஜெர்மனி அணி கூடுதலாக ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு ஜெர்மனி முன்னேறியது. இந்தநிலையில் நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, ஸ்பெயினை எதிர்கொள்கிறது.