சபையில் அருச்சுனா எம்.பி குடுமிபிடி சண்டை; கஜேந்திரகுமார் எம்.பிக்கு எச்சரிக்கை!

0
30

நாடாளுமன்ற உறப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் குற்றம் சுமத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அவரது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம் இன்று அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயாரைக் கொச்சைப்படுத்தி மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அர்ச்சுனா எம்.பி சபையில் தெரிவித்தார். இனிமேலும் அவருக்கு அருகில் அமர்ந்து என்னால் சபையில் இருக்க முடியாது எனவும் அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டார்.

அவரது ஆசனம் மாற்றப்படாவிட்டால், சபை நடவடிக்கைகளின் போது அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என அர்ச்சுனா எச்சரிக்கை விடுத்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற வரப்பிரசாதக் குழுவிலிருந்து உடனடியாக நீக்குமாறும் அர்ச்சுனா எம்.பி  வலியுறுத்தினார்.