புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அலி சப்ரி ரஹீமுக்கு நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கல்பிட்டி காவல் நிலையத்தில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார். அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி காவல்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை (Ali Sabri Rahim) உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
