தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் அனுர மானதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீற்றம்
”நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கின்றீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க வேண்டுமா? என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரியைக் கேட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் அனுர மானதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
