ஏலியனுடன் அமர்ந்து அயலான் படத்திற்காக வேலை பார்க்கும் ஏ.ஆர் ரஹ்மான்; தீயாய் பரவும் புகைப்படம்

0
232

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் ஒக்டோபர் 6ம் திகதி வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக பல தடைகளை சந்தித்து வரும் அயலான் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி கொண்டிருக்கின்றது. பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அயலான் டீசர் ஒக்டோபர் 6ம் திகதி வெளியாகும் என புகைப்படம் ஒன்றுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஏலியன்ஸ் அருகில் அமர்ந்து தீயாய் டீசர் வெளியீட்டு பணியில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

In The Final Works Of Ayalaan Teaser