போலி கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபர் நியமனம்: ஜனாதிபதி அரசியலமைப்பை முற்றாக மீறிவிட்டார்

0
156

சபாநாயகரால் அனுப்பப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அரசியலமைப்பை முழுமையாக மீறியே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொலிஸ்மா அதிபரை நியமித்திருந்தாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்துரைத்த அவர்,

அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை திரிபுபடுத்தி சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை இந்த சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்.

இது அரசியல் சட்டத்தை முழுமையாக மீறுவதாகும். இந்த மோசடி கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி பொலிஸ்மா அதிபரை நியமித்தது சட்டவிரோதமானது.

அவர் அரசியல் சட்டத்தை முழுமையாக மீறியுள்ளார். இது முற்றிலும் தவறான செயலாகும். இது பிரதமருக்கு தெரியும், பிரதமரால் இதற்கு பதில் சொல்ல முடியாது.

சபாநாயகரும் அரசியலமை முழுமையாக மீறியுள்ளார். அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? ஜனாதிபதி நன்கு கற்றவர். இந்த இரண்டு குறிப்புகளின் பிரகாரம் பொலிஸ்மா அதிபருக்கு எவ்வாறு நியமனம் வழங்கினார்?. முழுமையாக இங்கு அரசியலமைப்பை ஜனாதிபதி மீறியுள்ளார்” என்றார்.