உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple, தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய மூன்றாவது நிறுவனமாக Apple நிறுவனம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் Nvidia மற்றும் Microsoft ஆகிய நிறுவனங்கள் இந்தச் சாதனையை அடைந்தன.
iPhone 17 இன் வலுவான விற்பனையால் Appleஇன் பங்குகள் இன்று 0.1% அதிகரித்து இந்தச் சாதனையை அடைந்தன. Apple நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் $1 ட்ரில்லியன் மதிப்பையும், 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் $2 ட்ரில்லியன் மதிப்பையும், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் $3 ட்ரில்லியன் மதிப்பையும் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



