மலேஷியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) மலேஷிய மன்னரால் நியமிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு அரண்மனை தெரிவித்துள்ளது.
மலேஷியாவின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிலையில் 222 ஆசனங்களுக்கான இத்தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிமின்(Anwar Ibrahim) பக்காதான் ஹராப்பான் (Pakatan Harapan) கூட்டணி 82 ஆசனங்களை வென்றுள்ளது.
