தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரவின் பிரச்சாரக்கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அமைப்பாளர் உப்பாலி சமரசிங்க தலைமையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதில் தேசிய மக்கள் சக்தியின் கட்சி முக்யஸ்தர்கள், ஆதரவாளர்கள், பல பகுதிகளில் இருந்தும் வந்த பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.




