ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரவின் நடவடிக்கைகள்; தமிழர்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
114

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களை இலகுவாகச் சென்றடைவதன் காரணமாக  ஜனாதிபதி மீதான நம்பிக்கை பொதுமக்களிடத்தில் வலுவடைந்து வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவானர் ஐன்ஸ்டின் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அவர்கள் சார்ந்திருந்த கட்சியின் தலைவர்களது வழிகாட்டலின் கீழ் தங்களது வாக்குகளை அழித்திருந்தாலும் கூட இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களை விட இம்முறை தேசிய மக்கள் சக்திக்கும் அதிகளவான வாக்குகளை வழங்கியிருக்கின்றார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் ஊழலை ஒழிக்கும் அநுரவின் அரசாங்கத்தில் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.