ஊவா மாகாண ஆளுநராக அநுர விதானகமகே நியமிப்பு

0
101

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதானகமகே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஏ.ஜே.எம். முஸம்மில் நேற்றையதினம் விலகியிருந்தார்.

தமது பதவி விலகலின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே ஏற்பட்ட ஆளுநர் பதவி வெற்றிடத்திற்கு அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.