கறுப்புப் பணம் தொடர்பில் ஆராயும் அனுர அரசாங்கம்; அச்சத்தில் பலர்!

0
154

இலங்கையில் உள்ள பண முதலைகளால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மனோரா மற்றும் பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்ட பெயர் விபரங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

கடந்த காலங்களில் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பன்டோரா ஆவணத்தில் இலங்கையிலுள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் நெருங்கிய உறவினரின் பெயரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.