ஓருவர் வெல்லும் வரைக்கும் ஒருத்தரும் கிட்டவும் வராயினம், வெண்டிட்டால் கதையே வேற, இப்ப எல்லா இடமும் தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவைப் பற்றித்தான் பேசிகொண்டுள்ளனர்.
சிறுமி கில்மிஷா இங்க ஒரு இசைக்குழுவில் பாடிக்கொண்டிருந்தாலும் இப்பிடி எல்லாருக்கும் தெரிஞ்ச பிள்ளையா பிரபலமாக இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில இருக்கிற ஒரு டிவி சிறுமி கில்மிஷாவுக்கு போட்ட நிபந்தனையைக் கேட்டால் வாயடைச்சுப் போய்விடுவீர்கள்.

எல்லாத்தையும் காசாக்கிப் பாக்கோணும் எண்ட நினைப்பில இருக்கிற அந்த டிவிக்காரர் கொழும்பிலையும் யாழ்ப்பாணத்திலையும் தங்கட கலையகத்தை வைத்துள்ளார். அவைதான் கீரிமலை சிவன்கோயிலில நடக்கிற சிவராத்தியை நேரடியா ரெலிக்காஸ்ட் செய்யிறவை.
இந்தக் கட்டத்தில ஒரு டொக்குமெண்டரிப் படம் எடுக்க வந்த வெள்ளைக்காரர் ஒருத்தர் கில்மிஷாவை வைச்சு ஒரு கோயில்ல பாடுற மாதிரி ஒரு வீடியோ எடுக்க விரும்பியிருக்கிறார்.

போன ஆண்டு அந்த நிகழ்ச்சியில கில்மிஷாவும் பாடினதால இந்த முறையும் பாட விடுவினம் எண்டு நம்பின பெற்றோர் வீடியோ எடுக்க அந்த வெள்ளைக்காரருக்கு ஓமெண்டிட்டினம். ஆனால் அவை நினைச்ச மாதிரி டிவிகாரர் அவ்வளவு சுலபமாக இதுக்குச் சம்மதிக்கவில்லை.
போனமுறை ஆக்கள் இல்லை. அதனால் இந்தப் பிள்ளைக்கு பாட ஒரு வாய்ப்பு குடுத்தம். இந்தமுறை இந்தியாவில இருந்து சுப்பர் சிங்கர்ஸைக் கூட்டிக்கொண்டு வருகிறோம். அந்த மேடையில எப்பிடி இந்த சிறுமியை பாட வைக்கிறது.

சரி. வேணுமெண்டா இப்பிடிச் செய்வம். ஒரு 10 லட்சத்தைத் தாங்கோ. அந்த மேடையில நாங்கள் பாடுறதுக்கு வாய்ப்பு தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
அந்தப் பிள்ளை பாடக் கேட்டதைக் கூட தங்கட ‘ஹப்பிட்டலை’ பெருக்கிறதுக்கு காசு வாங்க நினச்சிருக்கினம். ஆனால் பெற்றோர் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ளவில்லை. பிறகு கோயிலுக்குள்ள வேறு பக்கவாத்தியங்களோட கில்மிஷா பாட்டுப் படிச்சு அதைத்தான் வீடியோ எடுத்துள்ளனர்.

இப்ப குறித்த சிறுமி கில்மிஷா அந்த டிவியில் பாடுவதற்கு 10 லட்சம் குடுத்தாலும் காணாது. அந்தளவுக்கு கில்மிஷா பெயரும் திறமையும் எல்லா இடமும் பரவியுள்ளது.
ஆனால் அந்தப் 10 லட்சம் கேட்டவரின் பிள்ளை? தற்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பதாக முகநூலில் இந்த பதிவை ஈடுப்பட்டுள்ளனர்.