தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு உழைத்த மூத்த சிங்கள நடிகர் ரவீந்திர ரன்தெனிய, தானும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது மனைவி ப்ரீத்தி ரந்தெனியவின் முகநூல் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நம்பிக்கைகள் மங்கி வருவதாகவும், நாடு நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
