இலங்கையில் இன்று இன்னோர் விபத்து; 8 பேர் வைத்தியசாலையில்

0
215

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ஹெல்பொட எனும் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 8 பேர் காயமடைந்ததோடு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாவுக்குச் சென்ற பயணிகளே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மற்றுமொரு விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் | Another Accident Was Reported In Sri Lanka

வைத்தியசாலையில் அனுமதி

காயமடைந்த 20 பேரில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும் நால்வர் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதி தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என விசாரணையின் போது இதனை புசல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மற்றுமொரு விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் | Another Accident Was Reported In Sri Lanka