ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்; ஏழு தளங்களின் கீழ் 54 நிறுவனங்கள்!

0
275

ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர் வசதிகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவுவதற்கு ஜனாதிபதி செயலகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செயல்திறனை அதிகரிக்க தொடர்புடைய செயல்முறைகளை எளிதாக்குதல், நேரத்தை குறைத்து தகவல்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்குவதே அந்த நிறுவனங்களின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.