Android 12 இயங்குதளத்தில் தரப்படவுள்ள அட்டகாசமான வசதி

0
628

முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய மொபைல் இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது.

அத்துடன் ஏராளமான அப்பிளிக்கேஷன்களை இவ் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

ஒவ்வொரு வருடமும் அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்புக்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கமாகும்.

இவ்வாறு புதிதாக அறிமுகம் செய்யப்படும்போது புதிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டே அறிமுகம் செய்யப்படும்.

இந்த வரிசையில் Android 12 இயங்குதளப் பதிப்பிலும் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது அப்பிளிக்கேஷன்களின் பின்னணி வர்ணங்களை மாற்றக்கூடிய வசதி இவ் இயங்குதளப் பதிப்பில் உள்ளடக்கப்படவுள்ளது.

இதனால் பயனர்கள் தாம் விரும்பிய வர்ணங்களில் அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.