சுமார் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த விமானத்தின் காக்பிட்டில் இருந்து விமானத்தின் கேப்டன் தூக்கி வீசப்பட்ட கதையை அறிந்து இணையம் அதிர்ச்சியடைந்துள்ளது.
தூக்கி வீசப்பட்ட விமானி
1990 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பர்மிங்காமில் இருந்து ஸ்பெயினின் மலகா நகருக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஆக்ஸ்போர்ட்ஷையர் மீது பறந்து கொண்டு இருந்தது.
அப்போது விமானத்தின் ஆறு காக்பிட் ஜன்னல்களில் இரண்டு உடைந்தது, இதனால் விமானத்திற்குள் அதிகப்படியான காற்று சுழன்றடிக்க அப்போது காக்பிட்டில் இருந்த விமானத்தின் கேப்டன் ஜன்னல் காற்று வழியாக உறிஞ்சப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக விமான பணியாளர் நைஜல் ஆக்டன்(Nigel Ogden), விமானத்தின் கேப்டன் ஜன்னல் வழியாக உறிஞ்சப்படுவதை பார்த்து தாவி அவரது கால்களை இறுகப்பற்றியுள்ளார்.
ஆக்டன் மெதுவாக ஜன்னலுக்கு வெளியே நழுவத் தொடங்கினார், மீண்டும் அதிர்ஷ்டவசமாக கேபின் குழு உறுப்பினர் ஜான் ஹெவர்ட்(John Heward) காக்பிட்டிற்குள் விரைந்து சென்று அவரை பெல்ட்டால் பிடித்தார்.
தி சிட்னி மார்னிங் ஹெரால்டு-க்கு ஓக்டன் வழங்கிய பேட்டியில், நான் காக்பிட்டிற்குள் நுழைந்த போது விமானத்தின் கேப்டன் டிம் லான்காஸ்டர்(Captain Tim Lancaster) தனது சீட் பெல்ட்டிலிருந்து உறிஞ்சப்பட்டார், “நான் கட்டுப்பாட்டு நெடுவரிசையின் மீது குதித்து, அவர் வெளியே செல்வதை தவிர்க்க அவரது இடுப்பைச் சுற்றி பிடித்தேன்.
நான் அவரை இழக்கப் போகிறேன் என்று நினைத்தேன், ஆனால் அவர் ஜன்னல்களைச் சுற்றி U- வடிவத்தில் வளைந்தார். அவரது மூக்கில் இருந்தும் தலையின் பக்கவாட்டில் இருந்தும் ரத்தம் வெளியேறி ஜன்னலில் சிதறிக்கொண்டு இருந்தது. மிகவும் திகிலூட்டும் வகையில் அவரது கண்கள் திறந்திருந்தது. அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த இணையம்
இந்த கதை முதலில் 2005ல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, ஏர் க்ராஷ் இன்வெஸ்டிகேஷன் – ப்ளோ அவுட் என்ற தலைப்பில் தேசிய புவியியல் ஆவணப்படத்தில் இந்த கதை இடம்பெற்றது.
இந்நிலையில் சம்பவம் நடந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு படக்குழுவினர் மீண்டும் ஒரு முறை இந்த கதையை வைரலாகியுள்ளனர். மறுபதிப்பின் ஸ்கிரீன் ஷாட்கள் 170,000 லைக்குகளையும் 38,000 ரீட்வீட்களையும் குவித்துள்ளது.