ஸ்பூனை உடலில் வைத்து நபரொருவர் உலக சாதனை கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஈரான் நாட்டை சேர்ந்த அபோல்பாசல் சபேர் மொக்தாரி என்ற நபரே ஸ்பூங்களை வைத்து சாதனை ஒன்றை செய்து படைத்துள்ளார்.
ஈரானின் கராஜில் பகுதியை சேர்ந்த அவர், தனது உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக, 64 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி முந்தைய சிறந்த கின்னஸ் உலக சாதனையை தற்போது அபோல்பாசல் முறியடித்துள்ளார்.

இந்த உலக சாதனை தொடர்பில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவர், “நான் குழந்தையாக இருந்த போது தற்செயலாக என்னுடைய இந்த திறமையை கவனித்தேன்.”
பல ஆண்டு பயிற்சி மற்றும் முயற்சிக்குப் பிறகு, எனது திறமையை வலுப்படுத்தி, இப்போது இருக்கும் இடத்திற்கு அதை வளர்த்துக் கொள்ள முடிந்தது,” என்று மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.