பிரேத அறையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..

0
333

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 26 வருடங்கள் தொழில்நுட்ப உதவியாளராக பிரேத அறையில் கடமையாற்றி வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களில் இருந்து வெளியேறும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவ் ஊழியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான ஜயலால் லியனாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.