மஹிந்தானந்த அளுத்கமகேயின் தீவிர ஆதரவாளர் மாயம்!

0
475

அரசியல்வாதி மஹிந்தானந்த அளுத்கமகேயின் தீவிர ஆதரவாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் பேராதனை உத்ஹித பூங்காவுக்கு முன்பாக வர்த்தகம் நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வர்த்தகரை காணவில்லை என காணாமல் போனவரின் மனைவியால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொலை வழக்கு விசாரணைகள்

47 வயதான குறித்த நபர் கண்டி பிரதேசத்தின் அரசியல்வாதியான மஹிந்தானந்த அளுத்கமகேயின் தீவிர ஆதரவாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

மஹிந்தானந்த அளுத்கமகேயின் தீவிர ஆதரவாளர்  மாயம்! | Srilanka Man Missing

அதேவேளை குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு கொலை வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே அவர் காணாமல் போயிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.