இலங்கையில் 18 வயது யுவதியை கடத்திச் சென்று 4 பேர் பாலியல் துஷ்பிரயோகம்!

0
243

கடுகன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவர் நான்கு நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து சிறுமியை கடத்திச் சென்று பொத்தபிட்டிய குருலு வெவாவிற்கு முன்பாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் 18 வயது யுவதியை கடத்திச் சென்று 4 பேர் அரங்கேற்றிய கொடூரம்! | 18 Year Old Girl Kandy Sexually Abused 4 Persons

சந்தேகநபர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மற்ற மூவரும் முச்சக்கர வண்டியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 சந்தேக நபர்கள் போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக குறித்த யுவதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 18 வயது யுவதியை கடத்திச் சென்று 4 பேர் அரங்கேற்றிய கொடூரம்! | 18 Year Old Girl Kandy Sexually Abused 4 Persons

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.