இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை இலங்கை அரசாங்கத்திற்கான எச்சரிக்கையாக பார்க்கலாம் என புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவிக்கையில், மோடியை இயக்குவதே அமித்ஷா தான். மிக அதிகமாக அரசியல் ரீதியாக மோடியை இயக்குவது அமித்ஷா மற்றையது அஜித் தோவல். இந்த இருவரும் மிகவும் இணைந்தவர்கள்.
அதனால் அவர்களிடம் தரவு இருக்கிறது தகவல் இருக்கிறது. ஆதாரம் இருக்கிறது. இது ஒருவேளை இலங்கையை அடிபணிய வைக்கலாம். அமித்ஷாவின் கருத்தென்பதை பத்தோடு பதினொன்றாக பார்க்க முடியாது.
அவர் அந்த கருத்தை வெறும் வாய் வார்த்தையாக சொல்லவில்லை. அதில் நிறைய விடயங்கள் புதைந்துள்ளன. இதனை இலங்கை அரசாங்கத்திற்கான எச்சரிக்கையாக பார்க்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.