அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் மர்மமான முறையில் மரணம்!

0
187

அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயதான நடிகர் கோல் பிரிங்க்ஸ் பிளென்டி (Cole Brings Plenty) மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கோல்பிரிங்க்ஸ் பிளென்டி எல்லோஸ்டோன் ஸ்பின் ஆப் தொடரில் நடித்து பிரபலமானவர்.

கன்சாஸ் பகுதியில் வசித்து வந்த அவர் 4 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமான நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதியில் தனது காரில் பிணமாக கிடந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவராத நிலையில் இதுதொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.

கோல்பிரிங்க்ஸ் மீது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணொருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் நடிகரை கைது செய்ய பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். அப்போதுதான் நடிகர் கோல்பிரிங்க்ஸ் பிளென்டி மாயமானது தெரியவந்துள்ளது.