ஈரான் போரில் உண்மையை மூடி மறைத்த அமெரிக்கா; வெளிச்சத்துக்கு வந்த தகவல்!

0
18

ஈரான் – இஸ்ரேல் போர் ஆரம்பித்து நாளை இருவாரங்களை தொடவுள்ள நிலையில் ஈரான் தாக்குதலில் அமெரிக்க படை நிலை குலைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குவைத்தில் அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஏற்கனவே உயிரிழந்த ஏழு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களைத் தவிர பெருமளவிலான சிப்பாய்கள் காயமடைந்துள்ளமை கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பலமாகியுள்ளது.

ஆரம்பத்தில் உயிரிழப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 100 – 150 வரையான அமெரிக்க சிப்பாய்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் அமெரிக்காவிலுள்ள இரண்டு இராணுவ மருத்துவமனைகளுக்கும், ஜெர்மனியின் லேண்ட்ஸ்டுலில் (Landstuhl) உள்ள இராணுவ மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை காயமடந்த நிலையில் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதில் ஒருவருக்கு உடல் உறுப்பு ஒன்றை அகற்ற வேண்டிய (amputation) நிலை ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் ஆரம்பித்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகவுள்ள நிலையில், இவ்வளவு அதிகமானோர் காயமடைந்த தகவலை அமெரிக்க இராணுவம் இதுவரை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

அதேவேளை மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்கத் தரப்பு பாதிப்புகள் குறித்த உண்மையான விபரங்களை மறைப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.