களைகட்டவிருக்கும் அம்பானி வீட்டு திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள்: விருந்தினர்கள் யார் தெரியுமா?

0
204

தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வெரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிக்கும் வரும் ஜூலை 12 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து மார்ச் 1ஆம் திகதியிலிருந்து 3ஆம் திகதி வரையில் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

குஜராத் மாநிலம், ஜாம் நகரிலுள்ள பிரம்மாண்ட ரிலையன்ஸ் க்ரீன்ஸ் வளாகத்தில் நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில் மார்க் ஸக்கர் பெர்க், பில் கேட்ஸ், மோர்கன் ஸ்டான்லி, பாப் இகர், லாரி ஃபிங்க் போன்ற உலக பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.

பயணத் திட்டம்

ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்கள் அனைவரும் டெல்லி, மற்றும் மும்பை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தினூடாக மார்ச் 1ஆம் திகதி குஜராத்தின் ஜாம் நகருக்கு காலை 8 மணியிலிருந்து 1 மணிக்குள்ளாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.

வரும் விருந்தினர்கள், ஹேண்ட் பேக் மற்றும் பெரிய சைஸ் பேக் மட்டும் வைத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். மூன்று சூட்கேஸ்களுக்கு மேலாக வைத்திருந்தால் மற்ற விமானங்கள் மூலம் ஜாம் நகருக்கு கொண்டு வரப்படும். மார்ச் 1,2,3 ஆம் திகதிகளில் இரவு நேரங்களில் கொண்டாட்டம் நடைபெறும்.

முதல் நாள் கொண்டாட்டம்

முதல் நாள் இரவு எலிகன்ட் காக்டெய்ல் Elegant Cocktail என்ற தீமில் கொண்டாட்டங்கள் எவர்லேண்ட் நகரில் நடைபெறும்.

இரண்டாம் நாள் கொண்டாட்டம்

இரண்டாம் நாள் ஜங்கிள் ஃபீபர் Jungle Fever என்ற தீமில் அம்பானியின் விலங்குகள் பராமரிப்பு மையத்தில் கொண்டாட்டம் நடைபெறும்.

இதற்கு டெஸி ரொமான்ஸ் தீமில் அதாவது, தெற்காசிய பாரம்பரிய உடை அணிய வெண்டும் என விருந்தினர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

மூன்றாம் நாள் கொண்டாட்டம்

முதலில் Casual Chic என்ற ஸ்டைலில் உடைகள் அணிந்து ஜாம் நகரை சுற்றிப் பார்க்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய பாரம்பரிய உடைகளை விருந்தினர்கள் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அனைவருக்குமான உடைகள், ஹேர் ஸ்டைல், மேக்கப் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.