அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

0
147

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம் நேற்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.

இதனையொட்டிய நிகழ்வு கொட்டகலை (சி.எல்.எப்) கேட்போர் கூடத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

அதேநேரத்தில் கொட்டகலை ஆலயத்தில் விசேட பூசைவழிப்பாடுகள் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது இ.தொ.காவின் பிரதி தலைவர்களான, அனுஷியா சிவராஜா, கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுறை, போசகர் ஜேகதிஸ்வரன், முன்னாள் பிரதேச தலைவர்கள், உறுப்பினர்கள் சபை உறுப்பினர்கள், இ.தொ.காவின் மாவட்ட தலைவர்கள் தலைவிகள் ,தோட்ட தலைவர்கள், தலைவிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.