சமூக வலைதள தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு

0
102

சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பினும் இன்னுமும் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்று வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

தொழிநுட்ப காரணங்களால் சமூக வலைத்தளங்களில் இருந்து தேர்தல் பிரச்சாரங்களை நிறுத்துவதை நடைமுறைபடுத்த முடியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தள பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் சுமார் 80 பேரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைத்து அவற்றை நிறுத்துமாறு அண்மையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்துமாறு தாம் தொடர்ச்சியாக அறிவுறுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்துமாறு அறிவுறுத்தினாலும், தேர்தல் தொடர்பான பல்வேறு கருத்துக்கணிப்பு அறிக்கைகள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.