நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளையதினம் (03) மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்வோரை கைது செய்ய விசேட சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 3 ஆம் திகதி உலக மது விலக்கு தினமாகும். இதனையொட்டியே சகல மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளன. மேலும் மதுபானக் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள 1913 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.