DeepSeek க்குப் போட்டியாக Qwen 2.5 Max ஐ களமிறக்கிய அலிபாபா

0
115

DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது செயலியான Qwen 2.5 Max ஐ அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “Qwen 2.5-Max செயற்கை நுண்ணறிவு செயலியானது DeepSeek, ChatGPT, Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச AI தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மொடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவுசெய்து பிரபலமடைந்து வரும் நிலையில் அதற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் அலிபாபாவின் Qwen 2.5-Max தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.