துபாய் கடற்கரையில் சொகுசு படகில் அஜித்: வைரலாகும் காணொளி

0
258

துபாயில் உள்ள பிரபல கடற்கரையில் சொகுசு படகில் குடும்பத்தாருடன் நடிகர் அஜித்குமார் பயணம் செய்யும் காணொளி வெளியாகியுள்ளது.

அருகில் உள்ள படகில் இருந்த சில ரசிகர்கள் அவரை நோக்கி தல என்று கோஷமிட தன் கைகளை உயர்த்தி அஜித் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், நடிகர் அஜித்குமார் தனது விடாமுயற்சி படத்திற்கான பணிகளை அஜர்பைஜான் நாட்டில் முடித்துவிட்டு இப்பொது துபாயில் அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், புத்தாண்டை தனது குடும்பத்துடன் அங்கு கொண்டாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oruvan
Oruvan