எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மனைவி ஜலனி பிரேமதாசவின் பிறந்தநாளை முன்னிட்டு பல விசேட சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
அந்தவகையில் சோமாவதிய ரஜமகா விகாரையில் நேற்று விசேட சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த விசேட வழிபாடுகளில் மல்வத்து மகாவிஹார பார்ஷ்வ கலாநிதி பஹமுனெய் தர்மகீர்த்தி ஸ்ரீ சாரங்கர சுமங்கல , சோமாவதி ரஜமஹா விகாரையின் மகாசங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
சோமாவதிய ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி பிரேமதாச மகா சங்கரத்தினரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளனர்.

