தமிழ் சினிமாவில் காக்கா முட்டை படத்தின் மூலம் மிகப்பெரியளவில் வெற்றியை பெற்றதோடு அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான நடிகையாக மாறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் வட சென்னை படத்தில் நடித்த சில காட்சிகள் குறித்து பகிந்துள்ளார்.
கெட்ட வார்த்தைகள்
வடசென்னை படத்தில் படுநெருக்கமான காட்சி கெட்ட வார்த்தைகள் என்று நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் கூறியதாவது, இப்படத்தில் எனக்கு முன் 2 நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு பின் நான் நடித்தேன். வெற்றிமாறன் சார் ஆடிஷனில் உனக்கு தெரிந்த அசிங்கமான வார்த்தைகளை பேச வேண்டுன்னு சொன்னார். அப்படி பேசினால் தான் சரியாக வரும் என்று கூறியதால் எல்லா கடவுளையும் வேண்டி அசிங்க அசிங்கமாக பேசினேன். மேலும் தனுஷுடன் நெருக்கமான காட்சிகள் எனக்கு சௌகரியமாக இருப்பது முக்கியம். இல்லை என்றால் வேண்டாம் என்று கூறியிருந்தார்.
தனுஷுடன் நெருக்கமான காட்சி
ஆனால் எனக்காக சில காட்சிகள் குறைத்துக் கொண்டார் வெற்றிமாறன் சார். எனக்கு சௌகரியமாக இருப்பது மட்டும் ஷூட் செய்யலாம் என்று தனுஷும் கூறினார். மேலும், நான் மோசமான நடிகையா என்று பல முறை தனுஷுடம் கேட்டேன். அதற்கு அவர், இல்லை, நான் உங்கள் மீது நல்ல மரியாதை வைத்திருக்கிறேன் ஐஷு. எனக்கு உங்கள் நடிப்பு பிடித்திருக்கிறது என்றும் வட சென்னை 2 படத்தில் பத்மா ரோல் டிரேக் மார்க்கா இருக்கனும் என்றும் கூறினார் தனுஷ் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.