சுற்றுலா சென்றவர்களின் வான் விபத்து

0
102

பண்டாரவளை – கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

.காலி பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற குழுவினர் பயணித்த வானே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.