ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம (Kumara Welgama) தெரிவித்துள்ளார்.
மேலும், அதுவரையில் அவசரப்படாமல் பொறுமையாக செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான டிக்கெட்டை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவே (Sajith Premadasa) எனக்கு வழங்கினார்.

அதுபோல புதியக் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவும் சஜித் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
நாட்டுக்கு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) வாழ்த்து தெரிவித்த குமார வெல்கம மீண்டும் அரசியலுக்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
