ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற ஆப்பிரிக்க தாய் கின்னஸ் சாதனை!

0
638

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்த தாயும் சேய்களும் மொராக்கோவில் இருந்து சொந்த நாடான மாலிக்குத் திரும்பியுள்ளனர்.

2021ம் ஆண்டு மே மாதம் ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்லி என்ற பெண், பிரசவத்திற்கு முன் சிறப்பு சிகிச்சைக்காக மொராக்கோ அனுப்பப்பட்டார்.

அங்கு 5 பெண் குழந்தைகள், மற்றும் 4 ஆண் குழந்தைகளை அவர் பெற்றெடுத்த நிலையில், மொராக்கோவின் காசாபிளாங்கா நகரில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வசித்து வந்தார்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஹலிமா, தற்போது சிகிச்சைகள் அனைத்தும் நிறைவுற்று சொந்த நாடான மாலிக்குத் திரும்பியுள்ளார்.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று கின்னஸ் சாதனை படைத்த தாய்! | 9 Children In One Birth Won The Guinness Record

26 வயதான ஹலிமா சிஸ்ஸே. 2021-ம் ஆண்டு மே மாதம் 4 -ம் திகதி ஹலிமாவுக்கு அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளுக்கு தற்போது ஒன்றரை வயதான நிலையில், அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று கின்னஸ் சாதனை படைத்த தாய்! | 9 Children In One Birth Won The Guinness Record

குழந்தைகளின் தந்தை அப்தெல் காதர் அர்பி. ஒரே பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் பிறந்து ஆரோக்கியத்துடன் வாழும் குழந்தைகள் என இக்குழந்தைகள், கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே, ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறப்பது என்பது இதற்கு முன் இரு முறை நடந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் உயிரோடு நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.