இன்று எரிபொருள் விநியோக செயற்பாடுகளுக்கு பாதிப்பு!

0
420

கனிய வள சேவையாளர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கனியவள உற்பத்திப் பொருட்கள் குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக இன்றைய தினம் எரிபொருள் விநியோக cccபாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் ஏற்படவுள்ள அபாயம்! | Danger In Fuel Supply Operations

இதேவேளை, கடந்த 6 மாதங்களாக கனிய வள சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எந்தவொரு ஊழியரோ அல்லது தொழிற்சங்கமோ அத்தியாவசிய விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.