பூமியையும் நிலவையும் செல்ஃபி எடுத்த ஆதித்யா எல் – 1 விண்கலம்

0
235

சூரியனை ஆராய்வதற்காக இஸ்ரோ மூலம் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்.1’ விண்கலம் , அதன் கமராவைப் பயன்படுத்தி பூமியையும் நிலவையும் செல்ஃபி எடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஆதித்யா எல்.1’ விண்கலம் சூரியனுக்கு அருகில் செல்லாது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள ‘லாக்ரேஞ்ச் பாயிண்ட்’ என்று வானியலாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்த இடம் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ‘ஆதித்யா எல்.1’ விண்கலமானது இந்த இடத்தை அடைய 125 நாட்கள் எடுக்கும்.

‘ஆதித்யா எல்.1’ விண்கலம், பூமியின் சுற்றுப்பாதையில் தங்கி, பூமியைச் சுற்றி வருவதன் மூலம் தேவையான வேகத்தை அடைந்த பிறகு விண்வெளி வழியாக ‘லாக்ரேஞ்ச் பாயின்ட்’ வரை செல்லும்.

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா இவ்வாறானதொரு விண்கலத்தை அனுப்புவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.