வில்லி அவதாரம் எடுக்கும் நடிகை திரிஷா: யார் படத்தில் தெரியுமா?

0
104

நடிகை திரிஷா அடுத்தப்படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் பிருந்தா என்ற வெப் சீரிஸ் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

அடுத்ததாக விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதில் வில்லி ரோல் ஏற்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.