தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவிருக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது.
இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கடந்த புதன்கிழமை அதிகாலை அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றடைந்தனர்.
அங்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் விஜய் ஃபேன் பாய் மோடுக்கு மாறியுள்ளார். அதன்படி திரையரங்கில் ஹாலிவுட் படமான Equalizer 3 FDFS பார்த்து ரசித்துள்ளார்.
அதுவும் ரியல் ஃபேன் பாய் மோடுக்கு மாறியுள்ள அவர் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது எழுந்து நின்று அப்ளாஸ் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.