விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என்றும் சினிமாவில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாகக் கூறி ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நகர்ந்து விட்டார்.
பிக்பாஸ் சீசன் 8ல் நடிகர் விஜய் சேதுபதி தான் அடுத்த தொகுப்பாளராக களம் இறங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வலம் வரும் தகவலின் படி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ. 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.120 கோடி வரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.