கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் விட்டு அஞ்சலி: வைரலாகும் புகைப்படங்கள்

0
362

நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த், கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார்.

இதனையடுத்து 29ம் திகதி இறுதி ஊர்வலம் முடிந்ததும் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.

இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதேநேரம் சூர்யா டிவிட்டரில் இரங்கல் தெரிவித்ததோடு இரங்கல் காணொளி ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கேப்டன் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Oruvan
Oruvan
Oruvan
Oruvan