பெரும் கார் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்

0
114

பிரபல நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜீவா தம்பதியினர் தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​ கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக ஜீவாவும் அவரது மனைவியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. விபத்துக்குப் பிறகு ஜீவாவின் காணொளி ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.