நடிகர் துல்கர் சல்மானின் 02 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளாவில் நடிகர்களான பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போதே அவரின் 02 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பூடான் இராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த முறைப்பாடு குறித்து இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.